• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிகாரில் நீக்கப்பட்ட 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள்… ஆதாரம் இருப்பதாக சொல்லும் ராகுல் காந்தி

GenevaTimes by GenevaTimes
July 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிகாரில் நீக்கப்பட்ட 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள்… ஆதாரம் இருப்பதாக சொல்லும் ராகுல் காந்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 23, 2025 5:13 PM IST

பிகாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அவர்களின் விளையாட்டை இப்போது நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். தற்போது அவர்கள் வாக்காளர்களின் பெயர்களையே நீக்கி புது வாக்காளர் பட்டியலை கொண்டுவந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள், தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து படிவங்களை வழங்கி வருகின்றனர். அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து வரும் 25 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால், பல்வேறு தரப்பினரின் வாக்குரிமை பறிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை சேர்க்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது.

இந்த விவகாரத்தில் 88 பக்க பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் வாக்காளர்கள் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றியிருப்பதாகவும், 7 லட்சம் வாக்காளர்கள் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே மொத்தம் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியிருப்பதாகவும் வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இது வெறும் 52 லட்சம் நபர்கள் பற்றியது கிடையாது. மகாராஷ்டிராவில் அவர்கள் ஏற்கனவே மோசடி செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை கேட்டபோது அதனை கொடுக்க மறுத்துவிட்டார்கள். விடியோ ஆதாரங்களை கேட்டபோது, வீடியோ பதிவு தொடர்பான சட்டத்தை மாற்றிவிட்டார்கள். 1 கோடி வாக்காளர்கள் அங்கு சேர்க்கப்பட்டனர்.

கர்நாடகாவில் பெரும் திருட்டை கண்டுபிடித்துள்ளோம். அந்தத் திருட்டு எப்படி நடந்துள்ளது என்பதை கருப்பு வெள்ளையாக நான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன். அவர்களின் விளையாட்டை இப்போது நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். தற்போது அவர்கள் வாக்காளர்களின் பெயர்களையே நீக்கி புது வாக்காளர் பட்டியலை கொண்டுவந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 23, 2025 5:13 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிகாரில் நீக்கப்பட்ட 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள்… ஆதாரம் இருப்பதாக சொல்லும் ராகுல் காந்தி

Read More

Previous Post

போத்தலால் தாக்கி வைத்தியசாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி

Next Post

ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா? | Rishabh Pant retires hurt does he come back to bat again what rules says

Next Post
ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா? | Rishabh Pant retires hurt does he come back to bat again what rules says

ரிட்டயர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட் செய்ய வருவாரா? | Rishabh Pant retires hurt does he come back to bat again what rules says

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin