கோலாலம்பூர்:
கோலாலம்பூரிலிருந்து சீனாவின் செங்டூ நோக்கி சென்ற AirAsia விமானத்தில் பயணித்த பயணிகளிடையே கைகலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவரைச் சரமாரியாகத் தாக்கிக்கொள்ளும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் வைரலானது.
கடந்த திங்கட்கிழமை கோலாலம்பூரலிருந்து சீனாவின் செங்டூ நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த AIRASIA விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
4 மணி நேரப் பயணத்தின் போது, கபினின் விளக்குகள் அனைக்கப்பட்ட பின்னரும், விமானத்திலிருந்த 3 பெண்கள் பேசிக்கொண்டிருந்ததாகவுமப, அப்போது, பின் இருக்கையில் இருந்த ஆடவர் ஒருவர், தான் தூங்க விரும்புவதாகவும், அதனால் முன்னால் அமர்ந்திருந்த 3 பெண்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்த 3 இளம்பெண்களும் பின்னாலிருந்த ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.
பின்னர் விமானப் பணிப்பெண்கள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும், சுமார் 20 நிமிடங்கள் இந்த சச்சரவு நீண்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தின் போது விமானம் நடுவானில் சுமார் 7,000 அடி உயரத்தில் பறந்ததுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.




