• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்! | Election Commission of India begins preparations to hold vice presidential poll

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்! | Election Commission of India begins preparations to hold vice presidential poll
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் சாசன பிரிவு 324-ன்படி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எம்பிக்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயத்த நடவடிக்கைகள் முடிந்ததும், தேர்தல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக ஜெகதீப் தன்​கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைய இருந்​தது. இந்​நிலை​யில், தன்​கர் நேற்று முன்​தினம் திடீரென தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். ராஜி​னாமா கடிதத்தை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவுக்கு அவர் அனுப்பி வைத்​தார்.

“உடல்​நலனுக்கு முன்​னுரிமை அளித்​தும் மருத்​துவ ஆலோ​சனைக்கு கட்​டுப்​பட்​டும் அரசி​யலமைப்பு சட்​டப் பிரிவு 67(ஏ) பிரி​வின் கீழ் குடியரசு துணைத் தலை​வர் பதவியை நான் உடனடி​யாக ராஜி​னாமா செய்​கிறேன்” என்று அவர் தனது கடிதத்​தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தன்​கரின் ராஜின​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக்​கொண்​ட​தாக மத்​திய உள்துறை அமைச்​சகம் அறி​வித்​தது.

குடியரசு துணைத் தலை​வரே நாடாளு​மன்ற மாநிலங்​களவை​யின் தலை​வர் ஆவார். இந்​நிலை​யில், மாநிலங்​களவை தலை​வர் பதவி​யில் இருந்​தும் தன்​கர் வில​கி​யுள்​ளார். நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் தொங்​கி​யிருக்​கும் வேளை​யில் தன்​கர் பதவி வில​கி​யுள்​ளது கவனிக்கத்தக்கது.



Read More

Previous Post

‘எனக்கு விலக்குரிமை தேவையில்லை’ – டாக்டர் எம் அன்வாரை தன்னை குற்றம் சாட்ட சவால் விடுகிறார் – Malaysiakini

Next Post

South Africa vs India: டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி

Next Post
South Africa vs India: டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி

South Africa vs India: டிஎல்எஸ் முறைப்படி 88 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin