அந்த அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை
கேள்வி: பாஜகவுடனான கூட்டணியை 2023ஆம் ஆண்டில் முறித்துக்கொண்ட பிறகு, இப்போது மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அமையவுள்ள கூட்டணி ஆட்சியில் தாங்களும் அங்கம் வகிப்போம் என்று பாஜக தலைமை திரும்பத் திரும்ப கூறி வருகிறது. ஆனால் திருத்துறைப்பூண்டியில் ரோட் ஷோவின்போது பேசிய நீங்கள் ‘ஆட்சியில் பங்கு கொடுக்க, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல’ என்று கூறியிருக்கிறீர்கள். கூட்டணி ஆட்சி விஷயத்தில் உங்கள் நிலையை தெளிவுபடுத்த முடியுமா?

