Last Updated:
லண்டனை விடவும் மான்செஸ்டரில் குளிர் கடுமையாக இருக்கும் என்பதால் அது இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒத்து போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது
இந்திய கிரிக்கெட் அணி நாளை தனது 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை மான்செஸ்டர் நகரில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் வானிலை குறித்த முன்னறிவிப்புகள் இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் 3 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் இங்கிலாந்து அணி 2 போட்டியிலும் இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் நான்காவது போட்டி மான்செஸ்டர் நகரில் நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லக்கூடிய வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை டிரா செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும்.
தற்போது போட்டி நடைபெறும் மான்செஸ்டர் நகரில் வானிலை குறித்த முன்னறிவிப்புகள் இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
தொடக்க நாளான ஜூலை 23ஆம் தேதி நாளை மழை பெய்வதற்கு 65% வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதே போன்று வெப்பநிலை 19 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனை விடவும் மான்செஸ்டரில் குளிர் கடுமையாக இருக்கும் என்பதால் அது இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒத்து போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டி என்பது தொடர்ந்து 30 டிகிரி செல்சியஸ் 5 நாட்களுமே காணப்பட்டது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நிலவும் வானிலை இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் / குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் / பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
July 22, 2025 6:38 PM IST


