• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா Vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்தியா Vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 4:45 PM IST

இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின்போது இந்திய அணிபயிற்சியின்போது இந்திய அணி
பயிற்சியின்போது இந்திய அணி

இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆடும் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் 23ம் தேதி நாளை தொடங்குகிறது.

இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் பயிற்சியின்போது காயமடைந்த அர்ஷ்தீப் சிங்கும் 4வது போட்டியில் விளையாட மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், இருவருக்கும் மாற்றாக சிஎஸ்கே அணி வீரர் அன்ஷுல் கம்போஜ் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். இதனால் இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 2 பந்துவீச்சாளர்கள் தற்போது விலகி உள்ளதால் நட்சத்திர வீரர் பும்ரா மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் இறுதி நாளில் தான் ஆடும் லெவனில் உள்ள மாற்றங்கள் தெரிய வரும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது.

இதற்கிடையே பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த சிராஜ் வேலைப்பளுவை நினைத்து கவலைப்பட்டதில்லை எனவும் தாய்நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடுவதே தனது விருப்பம் எனவும் தெரிவித்தார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதே தனது நோக்கம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய சிராஜ் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 4வது டெஸ்ட்டில் விளையாடுவார் எனவும் இருவரும் இணைந்து சிறப்பாக பந்துவீசுவோம் எனவும்  உறுதியளித்தார். இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளநிலையில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஆவது டெஸ்டிற்கான ப்ளேயிங் 11 உத்தேச அணி-

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் / குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் / பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 22, 2025 4:45 PM IST

Read More

Previous Post

விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!

Next Post

ஜியோவின் சிறந்த பிளான்…! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்…

Next Post
ஜியோவின் சிறந்த பிளான்…! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்…

ஜியோவின் சிறந்த பிளான்...! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin