• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘1 கிலோ அரிசி உற்பத்திக்கு 4,000-5,000 லிட்டர் தண்ணீர் தேவை’.. பாலைவனமாக மாறும் மாநிலம்?

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
‘1 கிலோ அரிசி உற்பத்திக்கு 4,000-5,000 லிட்டர் தண்ணீர் தேவை’.. பாலைவனமாக மாறும் மாநிலம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 10:55 AM IST

பஞ்சாபின் பல மாவட்டங்களில், நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இவற்றில் மோகா மற்றும் பாட்டியாலா போன்ற மாவட்டங்களும் அடங்கும்.

'1 கிலோ அரிசி உற்பத்திக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தேவை'.'1 கிலோ அரிசி உற்பத்திக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தேவை'.
‘1 கிலோ அரிசி உற்பத்திக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தேவை’.

பஞ்சாப் மாநிலம் ஒரு பெரிய சுற்றுச்சூழல் நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது. ஒரு காலத்தில் பசுமைப் புரட்சியின் மையமாக இருந்த பஞ்சாப், தற்போது மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக நெல் சாகுபடி சொல்லப்படுகிறது. ஒரு கிலோ அரிசியை விளைவிக்க 4,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பஞ்சாப் அரிசி உற்பத்தியில் அதன் நிலத்தடி நீரில் 97% பயன்படுத்துகிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய நிலத்தடி நீர் உறிஞ்சும் மாநிலமாக பஞ்சாப்பை மாற்றியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 10 முதல் 14 ஆண்டுகளில் பஞ்சாபின் நிலத்தடி நீர் முற்றிலும் சரிந்துவிடும் என்று பிரசாந்த் அத்வைத் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சார்யா பிரசாந்த் எச்சரித்துள்ளார்.

ஆச்சார்யா பிரசாந்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான நெல் சாகுபடி காரணமாக, பஞ்சாப் பாலைவனமாக மாறுவதை எதிர்நோக்கி உள்ளது என்று கூறியுள்ளார். ஒரு காலத்தில் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் மையமாக இருந்த நிலையில், தற்போது பஞ்சாப் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதற்குக் காரணம், அதன் வெற்றியின் அடையாளமாக திகழ்ந்த அரிசி உற்பத்தி ஆகும். LinkedIn-ல் ஆச்சார்யா பிரசாந்த் பகிர்ந்துள்ள ஒரு பதிவில், ‘ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய சுமார் 4,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது’ என்று அவர் கூறியுள்ளார். மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது. இதற்காக, அது உறிஞ்சும் நிலத்தடி நீரில் 97% பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, பஞ்சாப் இந்தியாவில் மிகப்பெரிய நிலத்தடி நீர் உறிஞ்சும் மாநிலமாக மாறியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பஞ்சாபின் நிலத்தடி நீர் 10 முதல் 14 ஆண்டுகளில் தீர்ந்து போகக்கூடும்.

பஞ்சாபின் பல மாவட்டங்களில், நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இவற்றில் மோகா மற்றும் பாட்டியாலா போன்ற மாவட்டங்களும் அடங்கும். அரிசி மற்றும் கோதுமை ஆகியவை அரசாங்கம் வாங்கும் சில பயிர்கள் ஆகும். இது அவர்களின் விலையை உறுதி செய்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், விவசாயிகள் அவற்றை வளர்ப்பதன் மூலம் பயனடைவார்கள். இதுதொடர்பாக, வேளாண் பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பிரச்சனை புதியதல்ல. வேளாண் பொருளாதார நிபுணர் டாக்டர் சர்தாரா சிங் ஜோஹல், பல ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து எச்சரித்திருந்தார்.

இதையும் படிங்க: போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா? அப்ப உடனே இதை பண்ணுங்க.. இல்லையெனில் உங்கள் கணக்கு மூடப்படும்!

அப்போது, சாகுபடி பயிர்களை மாற்றுமாறு அவர் பரிந்துரைத்தார். 1986 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில், அவர் அரசாங்கத்திடம் ரூ.1,600 கோடி செலவிடுமாறு கேட்டுக் கொண்டார். இந்தப் பணம், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற குறைந்த நீர் உட்கொள்ளும் பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இருந்தது. நிதி அமைச்சகம் இந்தத் திட்டத்தை அங்கீகரித்ததாக அவர் கூறினார். ஆனால், இந்தத் திட்டம் விவசாய அமைச்சகத்திலேயே நின்றுவிட்டதாகவும், அது மீண்டும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலம் ஆபத்தில் உள்ளது. மேலும், உணவுப் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் இருப்பும் ஆபத்தில் உள்ளது என்று பிரசாந்த் அத்வைத் அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சார்யா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 22, 2025 10:55 AM IST

Read More

Previous Post

மான்செஸ்டரில் இந்திய அணி எப்படி? – ENG vs IND 4வது டெஸ்ட் | team India winless performance in Manchester 4th Test vs england ahead

Next Post

ஆகஸ்ட் 1 முதல் ரிம1.700 குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக அமல்படுத்தப்படும் – Malaysiakini

Next Post
ஆகஸ்ட் 1 முதல் ரிம1.700 குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக அமல்படுத்தப்படும் – Malaysiakini

ஆகஸ்ட் 1 முதல் ரிம1.700 குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக அமல்படுத்தப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin