• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்த தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை காலியாக்கிடும்…! என்னென்ன தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
July 21, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்த தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை காலியாக்கிடும்…! என்னென்ன தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 21, 2025 9:30 PM IST

நீங்கள் அடிக்கடி பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளைப் பின்பற்றாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

News18News18
News18

இன்றைய டிஜிட்டல் உலகில், ஏடிஎம் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், இந்த இயந்திரம் நமக்கு நிறைய வசதிகளைத் தரும் அதே நேரத்தில், சில ஆபத்துகளையும் தன் வசம் வைத்துள்ளது. சைபர் குற்றம் மற்றும் மோசடி தொடர்பான பல வழக்குகளில், ஏடிஎம்கள் தொடர்பான புதிய மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதன் காரணமாக, மக்கள் ஒரு சில நொடிகளில் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களை இழக்கின்றனர்.

நீங்கள் அடிக்கடி பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், சில முக்கியமான பாதுகாப்பு குறிப்புகளைப் பின்பற்றாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது. சைபர் மோசடியாளர்களிடமிருந்து நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க உதவும் 10 முக்கியமான எச்சரிக்கைகள் இதோ.

  1. எப்போதும் வெளிச்சமான மற்றும் பரபரப்பான இடத்தில் இருக்கும் ஏடிஎம் மையத்தைப் பயன்படுத்துங்கள். இருண்ட, அமைதியான அல்லது தனிமையான பகுதிகளில் உள்ள ஏடிஎம்களைப் பயன்படுத்த வேண்டாம். இந்த இடங்கள் பாதுகாப்பானவை அல்ல என்பதோடு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
  2. ஏடிஎம் மையத்திற்குள் உள்ளே சென்று உங்கள் ரகசிய குறியீடை உள்ளிடும்போது, யாரும் பார்க்காத அளவிற்கு உங்கள் கையால் கீபேடை மூடிக் கொள்ளுங்கள். இது மறைமுகமாக இருக்கும் கேமராக்களிடமிருந்து அல்லது உங்கள் பின் நம்பரைப் பார்க்க முயற்சிக்கும் நபர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.
  3. ஏடிஎம்மை பயன்படுத்துவதற்கு முன்பு, கார்டு ஸ்லாட் மற்றும் கீபேடை சரிபார்க்கவும். ஏதாவது வித்தியாசமாகவோ அல்லது தளர்வாக இருப்பது போலவோ தெரிந்தால், அது ஸ்கிம்மிங் சாதனமாக இருக்கலாம். அந்த ஏடிஎம்மைப் பயன்படுத்த வேண்டாம். உடனே இது குறித்து வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்.
  4. எப்போதும் வங்கிக் கிளைகளுக்குள் இருக்கும் ஏடிஎம்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும். இந்த ஏடிஎம்கள் சிறந்த பாதுகாப்பைக் கொண்டுள்ளன. மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
  5. ஏடிஎம் பயன்பாட்டிற்கு பிறகு போனில் வரக்கூடிய குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் அல்லது பயன்பாட்டு அறிவிப்புகளை எப்போது இயக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம், உங்களுக்கு தெரியாமல் யாராவது உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயற்சித்தால், விரைவாக அறிந்துகொள்வதோடு, உடனடியாக நடவடிக்கையும் எடுக்க முடியும்.இதையும் படிங்க: சாமானிய மக்களுக்கு ஏற்ற பர்ஃபெக்டான முதலீட்டுத் திட்டங்கள்… லிஸ்ட் இதோ…!
  6. ஏடிஎம் மோசடிகள் மற்றும் ஸ்கேம்களைப் பற்றி படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த மோசடிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்தால்தான், உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் மற்றும் இதில் சிக்காமல் இருக்க முடியும்.
  7. பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது போலவே உங்கள் ஏடிஎம் கார்டையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். அதை எப்போதும் உங்கள் பணப்பை அல்லது பர்ஸ் போன்ற பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.
  8. உங்கள் வங்கி அனுமதித்தால், உங்கள் ஏடிஎம் கார்டுக்கு தினசரி அல்லது குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்கவும். யாராவது உங்கள் கார்டை தவறாகப் பயன்படுத்தினால் பெரிய இழப்புகளைத் தடுக்க இது உதவும்.இதையும் படிங்க: பர்சனல் லோன், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் ரிஜெக்ட் ஆகுதா…? முக்கிய காரணங்கள் இவைதான்…!
  9. உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை அவ்வப்போது மாற்றவும். 1234 அல்லது உங்கள் பிறந்த தேதி போன்ற எளிய எண்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  10. நீங்கள் ஏடிஎம்-ஐ பயன்படுத்தும்போது, யாரும் உங்களுக்கு அருகில் நிற்கவில்லை அல்லது உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை பார்க்க முயற்சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருங்கள்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 21, 2025 9:30 PM IST

Read More

Previous Post

‘ஸ்டாலின் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Next Post

அரசு ஊழியர்கள் ‘துருன் அன்வார்’ பேரணியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்துகிறார். – Malaysiakini

Next Post
அரசு ஊழியர்கள் ‘துருன் அன்வார்’ பேரணியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்துகிறார். – Malaysiakini

அரசு ஊழியர்கள் ‘துருன் அன்வார்’ பேரணியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்துகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin