பெர்லின்:
ஜெர்மனியின் வடமேற்கு பகுதியில் உள்ள போம்டே நகரத்தில், ஒரு கார் சாலையை விட்டு விலகி ஓடி, ஒரு நிறுத்தப்பட்ட வாகனத்தில் மோதி, பின்னர் ஒரு வீட்டு தோட்டத்திற்குள் புகுந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை மோதி பின்னர் தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து வீட்டின் கூரையில் விழுந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அந்த சிறுவனும், காரை ஓட்டிய நபரின் மனைவியும் கடுமையாக காயமடைந்துள்ளனர். காரில் இருந்த மற்ற பயணிகள், ஓட்டுனரான 42 வயது ஆணும், அவரின் இரு மகன்கள் (வயது 11 மற்றும் 12), மேலும் 13 வயது சிறுவன்) ஆகியோர் காயம் அடைந்தனர்.
கார் முதலில் ஒரு நிறுத்தப்பட்ட வாகனத்தில் மோதி, பிறகு தடுப்புச்சுவரை தாண்டி தோட்டத்தில் நுழைந்துள்ளது. பின்னர் சீரற்ற நிலத்தை கடந்து, காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு 3 மீட்டர் உயரத்தில் உள்ள கூரையில் மோதியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த துயரமான விபத்திற்காக இரண்டு மீட்பு ஹெலிகாப்டர்கள், பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உடனடியாக களத்துக்கு அனுப்பப்பட்டனர். மீட்பு குழுவினர் கூரை வழியாக காரை வெட்டிக் கொண்டு வெளியே எடுத்து, க்ரேனின் உதவியுடன் கீழே இறக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.




