Last Updated:
ஜூலை 22ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
குடியரசுத் தலைவரின் அதிகாரம் தொடர்பான வழக்கில், ஜூலை 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்குகிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அதிகாரம் தொடர்பான வழக்கு ஜூலை 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது ‘சட்டவிரோதம்’ எனக் கூறிய உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.
அதோடு, மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது.
இதைத் தொடர்ந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா உள்ளிட்ட 14 கேள்விகள் எழுப்பி, அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ், கடந்த மே மாதம் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு அனுப்பியிருந்தார்.
Delhi,Delhi,Delhi
July 20, 2025 10:36 AM IST


