Last Updated:
ஹரியானாவை சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தோல்வியை தவிர்க்க முடியும். நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை கைப்பற்றி விடும்.
இதனால் இந்திய அணிக்கு அடுத்த 2 போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியில் 2 பவுலர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாற்று வீரராக அன்சுல் கம்போஜ் இந்திய அணியில் இணைய உள்ளார். ஹரியானாவை சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4-ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவர் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
July 20, 2025 8:59 PM IST


