கங்கார்
பாடாங் பெசார், சதாவ் சுங்கச்சாவடியின் அருகே உள்ள Jalan Baru Sadao பகுதியில் நடந்த கடத்தல் முயற்சியை தடுக்கும்போது, RM317,520 மதிப்பிலான 2,646 பெட்டிகள் உறைந்த கோழிக்கால்களை GOF பறிமுதல் செய்தது.
‘ஒப் தாரிங் வாஸ்ஸான் kedah/perlis’ என்ற கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து கிடைத்த தகவலின் பேரில் 18வது படையணி நடவடிக்கையை நடத்தியதாக வடக்கு பிரிகேட் GOF கமாண்டர் SAC ஷாரும் ஹாஷிம் கூறினார்.
அதிரடி சோதனை நேரத்தில், ஒரு வோல்வோ கன்டெய்னர் லோரி டிரைவர் ஒருசார் அதனுள் இருண்டஹ் பொருட்களை தாய்லாந்து பதிவை கொண்ட இரண்டு பிக்கப் வாகனங்களுக்கு மாற்றிக் கொண்டிருந்தார். சோதனையின் போது, கடத்த முயற்சிக்கப்பட்ட உறைந்த கோழிக்கால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மூன்று வாகனங்களும் (லோரி மற்றும் இரண்டு பிக்கப்) RM1.42 மில்லியன் மதிப்பை கொண்டதாக மதிப்பிடப்பட்டது.
48 வயதுடைய ஒரு உள்ளூர் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டது.




