Last Updated:
700 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் ஏற்படுத்தப்பட்டது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்பாக புதுப்பித்தார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். தோனி தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் தொடர்ந்து அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி தற்போது செயல்பட்டு வருகிறார்.
சென்னை அணியின் கேப்டனாக ருத்ராட் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு நடப்பு சீசனில் காயம் ஏற்பட்டதால் தோனி கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடமான 10-ஆவது இடத்தில் இந்த தொடரை நிறைவு செய்தது.
இதனால் அடுத்த சீசனில் அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் பொழுதை குடும்பத்தினருடன் கழித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஞ்சியில் தியுரி கிராமத்தில் அமைந்துள்ள மா தேவி கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற தோனி அங்கு சாமி தரிசனம் மேற்கொண்டார். 700 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் ஏற்படுத்தப்பட்டது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்பாக புதுப்பித்தார்கள்.
இந்த கோயிலுக்கு தோனி ஏராளமான நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்.
July 19, 2025 6:44 PM IST


