Last Updated:
பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் காணும் என பிகார் பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் பிற்படுத்தப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமருக்கு வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
மோதிஹரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, பிகார் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்றார். பாஜக ஆட்சியில் பிகாருக்கு பல மடங்கு அதிக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் ஜனதா தளம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. எதிர்க்கட்சிகள் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக பிகார் தேர்தல் களத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
July 18, 2025 10:16 PM IST


