• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின் | Russia agrees with Ukraine that peace talks need to be stepped up

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின் | Russia agrees with Ukraine that peace talks need to be stepped up
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போரில் ஈடுபட்டு வரும் நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு முறை துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில், இரு நாடுகளும் போர் கைதிகளைக் பரிமாறிக்கொள்வது என்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

எனினும், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இன்னும் நாள் குறிக்கப்படவில்லை. மேலும், போர் நிறுத்தத்துக்கான விதிமுறைகளை ஏற்பதில் இரு நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 16ம் தேதி கெடு விதித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ட்ரம்ப், “புதின் மீது நான் மிக​வும் அதிருப்​தி​யில் இருக்​கிறேன். அவர் மிக​வும் அழகாகப் பேசு​வார். ஆனால் இரவில் மக்​கள் மீது குண்​டு​களை வீசுகிறார். அடுத்த 50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும். மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் திட்டமும் உள்ளது” என்று தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில், ரஷ்யாவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் – அனில் கும்ப்ளே வலியுறுத்தல்..

Next Post

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அன்வாரிடம் இல்லை – பஹ்மி – Malaysiakini

Next Post
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அன்வாரிடம் இல்லை – பஹ்மி – Malaysiakini

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அன்வாரிடம் இல்லை – பஹ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin