Last Updated:
அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஓய்வை பெற்றுக் கொள்ளலாம்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றும். மான்செஸ்டர் நகரில் வரும் 23ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்திய அணிக்கு அடுத்த 2 போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவர் கடைசி போட்டியில் மட்டுமே களம் இறங்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அனில் கும்ப்ளே கூறியிருப்பதாவது:
கடைசி இரண்டு போட்டிகளிலுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாட வேண்டும். ஏனென்றால் 2 போட்டிகளுமே இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவர் விளையாட விட்டால் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவதற்கும் வாய்ப்புள்ளது.
July 18, 2025 6:27 PM IST


