Last Updated:
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
ஆதார் எண்ணை விநியோகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பொது கணக்குக் குழு வலியுறுத்தியுள்ளது.
ஆதார் என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண் இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு யூனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவால் (UIDAI) வழங்கப்படுகிறது. இது வெறும் ஒரு எண் என்பதை காட்டிலும், ஒரு தனி நபரின் இடம் மற்றும் பெயர், முகவரி, புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி ரேகைகள் போன்ற விவரங்களை கொண்டுள்ளது. ஆதார் இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழாக செயல்படுகிறது. மேலும் வங்கி கணக்கு திறப்பதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு மற்றும் பல்வேறு விதமான அரசு தொடர்பான திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு போன்ற விஷயங்களுக்கு ஆதார் உதவுகிறது.
இந்நிலையில், ஆதார் எண்ணை விநியோகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பொது கணக்குக் குழு வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, ஆதார் அட்டை தொடர்பாக தலைமைக் கணக்கு தணிக்கையாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ஆதார் எண் சரிபார்க்கும் போது தோல்வி விகிதம் அதிகமாக இருப்பதால் ஏராளமான தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் சமூகநலத் திட்டங்கள் சென்றடையாமல் இருப்பதாகக் கூறினார். 100 நாள் வேலைத் திட்டம், ரேஷன் பொருட்கள் விநியோகம் போன்ற சமூகநலத்திட்டங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பயோமெட்ரிக் குளறுபடி ஒரு மிகத் தீவிரமான பிரச்னை என்று அனைத்துக் கட்சி எம்.பிக்களும் குறிப்பிட்டதாகக் கூறினார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 18, 2025 7:01 AM IST

