• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான் | Jasprit Bumrah should play in 4th Test says Irfan Pathan

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான் | Jasprit Bumrah should play in 4th Test says Irfan Pathan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெட்டிங்லி யில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் 2-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் பும்ரா விளையாடினார். அதில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் பும்ரா களமிறக்கப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இர்பான் பதான் மேலும் கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ரா மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. அவரை இந்தத் தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தற்போது 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

அனைத்து அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் என விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச்சுமையை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? அவருக்கு வேறு ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். 3-வது போட்டிக்கும், 4-வது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது அவர் குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.

4-வது டெஸ்ட் போட்டி யானது, தொடரை தீர்மானிக்கும் போட்டியாக உள்ளது. பும்ராவுக்கு காயம் இல்லை என்றால், அவர் கட்டாயம் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஐசிசி சாம்பியன்ஷிப்பில், இது போன்ற முக்கிய சூழ்நிலை யில், மாற்றம் செய்வது அணி நிர்வாகம் அல்லது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்தது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பை கொடுக்கும். எனவே, அவரை அணியில் சேர்த்து விளையாட வைக்க வேண்டும். இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

பயணிகள் கவனத்திற்கு… முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம்..!

Next Post

ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம் | Makkal Osai

Next Post
ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம் | Makkal Osai

ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin