ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சவுகரியமான பயணத்தை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்களையும் முன்னெடுத்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அத்துடன், பல்வேறு திட்டங்களையும் பரிசீலித்து வருகிறது. அந்த வகையில், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


