• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பீகாரில் நடக்கும் கொலைகளுக்கு விவசாயிகள்தான் காரணமா? – மாநில உயர் அதிகாரி பகீர் பேச்சு

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பீகாரில் நடக்கும் கொலைகளுக்கு விவசாயிகள்தான் காரணமா? – மாநில உயர் அதிகாரி பகீர் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 17, 2025 6:19 PM IST

பீகார் காவல்துறையின் கூடுதல் அதிகாரி குந்தன் கிருஷ்ணன், விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் கொலைகள் அதிகரிக்கின்றன என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் “விவசாயிகளுக்கு வேலை இல்லாததால்” குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாக பீகார் காவல்துறையின் கூடுதல் தலைமையக அதிகாரி குந்தன் கிருஷ்ணன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் காவல்துறையின் கூடுதல் தலைமையக அதிகாரி குந்தன் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சமீபத்தில், பீகார் முழுவதும் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. பெரும்பாலான கொலைகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடக்கின்றன.

பெரும்பான்மையான விவசாயிகளுக்கு வேலை இல்லாததால், மழை வரும் வரை இது தொடர்கிறது. மழைக்குப் பிறகு, விவசாய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பரபரப்பாகி, சம்பவங்கள் குறைகின்றன.

பீகார் முழுவதும் கொலைகள் நடக்கின்றன. குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், ஊடகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொலைகளில் கவனம் செலுத்துகின்றன. தேர்தல்கள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளும் இதற்கு அதிக கவனம் செலுத்துகின்றன.

இளைஞர்கள் பணத்திற்காக இதுபோன்ற செயல்களை அதிகளவில் செய்கிறார்கள். எனவே இந்த மாதம் நாங்கள் ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளோம். அந்த பிரிவின் பணி, இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், ஒப்பந்தக் கொலையாளிகள் அனைவரின் தரவுத்தளத்தையும் உருவாக்கி, அவர்களை கண்காணிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முதலமைச்சர் நிதிஷ் குமார், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் உள்ளிட்ட வாக்குகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் காவல் அதிகாரி குற்றச்சம்பவங்களுக்கு விவசாயிகளை காரணமாக சொல்லியிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 17, 2025 6:19 PM IST

Read More

Previous Post

தெஹிவளை மிருககாட்சி சாலையில் புதிய வரவு : பிறந்த மலைப்பாம்பு குட்டிகள்

Next Post

குழந்தைகளுக்கு பால் ஆதார் பெறுவது எப்படி?தகவல்களை எப்போது சேர்க்கலாம்?

Next Post
குழந்தைகளுக்கு பால் ஆதார் பெறுவது எப்படி?தகவல்களை எப்போது சேர்க்கலாம்?

குழந்தைகளுக்கு பால் ஆதார் பெறுவது எப்படி?தகவல்களை எப்போது சேர்க்கலாம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin