• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.



இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா (Canada) எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிரந்தர கனேடிய குடியுரிமை



கெரி ஆனந்தசங்கரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்ததாகவும், தொடர்புடைய நபருக்கு விடுதலைப் புலிகளுடன் அவருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாகக் கூறி, அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பல சந்தர்ப்பங்களில் அவரது குடியுரிமை விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி | Canada Public Safety Minister Controversial Letter

மனிதாபிமானக் கருத்தாய்வுகளையும், அவரது குடும்பம் பிரிவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாலும், செந்தூரன் செல்வகுமார் என்ற நபருக்கு நிரந்தர கனேடிய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கெரி ஆனந்தசங்கரி சம்பந்தப்பட்ட கடிதங்களில் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.



எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதால், கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை



பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், அவர் தனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவது சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக கனடா பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி | Canada Public Safety Minister Controversial Letter

குறித்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட விபரங்களை வழங்குவது பொருத்தமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், கெரி ஆனந்தசங்கரி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து இதுபோன்ற கோரிக்கைக் கடிதங்களை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை கனடாவில் இருக்கும் நிலையில், நபர் ஒருவரின் குடும்பம் பிரிவதைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட தனது கோரிக்கையாது அசாதாரணமானது அல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பயங்கரவாத அமைப்புக்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என்றும், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்க மாட்டேன் என்றும் கெரி ஆனந்தசங்கரி தொடர்புடைய அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக கனேடிய பிரதமர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!        

Read More

Previous Post

பெண் குழந்தைக்கு தாயான ”வார் 2” பட நடிகை | Makkal Osai

Next Post

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime

Next Post
நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin