Last Updated:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வந்து விளையாடுமாறு இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இந்த தொடரை நடத்தலாம் என்றும் பிசிசிஐ இடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நாட்டில் நிலவக்கூடிய பிரச்சனைகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த சுற்றுப்பயணத்தை தவிர்த்து விட்டது. இந்த தொடரில் நட்சத்திர ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்த்த இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு வந்துள்ளது. வங்கதேசத்தில் திட்டமிடப்பட்ட தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் அடுத்த மாதம் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை கவனத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே பிசிசிஐ செயலர் தேவஜித் சைகலா தற்போது லண்டனில் உள்ளார்.
அவர் இந்திய அணி வீரர்கள், தலைமை பேச்சாளர் கௌதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி, இலங்கையின் அழைப்புக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
July 16, 2025 10:55 PM IST


