• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை ஏமாற்றிய பாகிஸ்தான் அரசு.. நடந்தது குறித்து வேதனையை பகிர்ந்த வீரர்

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை ஏமாற்றிய பாகிஸ்தான் அரசு.. நடந்தது குறித்து வேதனையை பகிர்ந்த வீரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 16, 2025 10:55 PM IST

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார் அர்ஷத் நதீம்

அர்ஷத் நதீம்அர்ஷத் நதீம்
அர்ஷத் நதீம்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரரையே பாகிஸ்தான் அரசு ஏமாற்றி இருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் என்கிற ஈட்டி எறிதல் வீரர் ஒலிம்பிக்கில் அந்நாட்டிற்குத் தங்கம் பெற்றுக் கொடுத்தார். அவரை பாகிஸ்தான் இளைஞர்கள் ஹீரோவைப் போன்று கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்த அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை வென்று பாகிஸ்தானுக்குப் பெருமை சேர்த்தார்.

சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் நாட்டிற்கு மோசமான பெயர் இருந்து வரும் சூழலில், அர்ஷத் நதீமின் இந்த சாதனை அந்நாட்டுக்கு ஓரளவு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர், நதீமுக்கு மாடு முதல் பணம், நிலம் வரை என ஏராளமான பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் தனியார் நிறுவனங்களும் அர்ஷத் நதீமுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கின.

குறிப்பாக, அவர் ஆயுள் முழுவதும் இலவசமாக எரிபொருளை (பெட்ரோல், டீசல்) பெற்றுக் கொள்ளலாம் என்று சில நிறுவனங்கள் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டன. மேலும், பாகிஸ்தான் மதிப்பில் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவித்திருந்தார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாண அரசுகளும் அர்ஷத் நதீமுக்குப் பரிசு மழை வழங்கி கௌரவித்தன. இந்நிலையில், லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த நதீம், பாகிஸ்தான் அரசால் தான் ஏமாற்றப்பட்டது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “எனக்கு ஏராளமான பரிசுகள் அளித்தார்கள் என்பது உண்மைதான். நீங்கள் கவனித்தீர்கள் என்றால், எனக்கு நிலம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அந்த வாக்குறுதிகள் போலியானவை. வாக்குறுதி அளித்தபடி எனக்கு நிலம் வழங்கப்படவில்லை. ஆனால், மற்ற அனைத்து பரிசுகளும் எனக்கு வழங்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 16, 2025 10:55 PM IST

Read More

Previous Post

‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

Next Post

சர்ச்சைக்குரிய ‘காதல் நிகழ்ச்சியில்’ நிர்வாண நடனத்தை உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

Next Post
சர்ச்சைக்குரிய ‘காதல் நிகழ்ச்சியில்’ நிர்வாண நடனத்தை உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

சர்ச்சைக்குரிய 'காதல் நிகழ்ச்சியில்' நிர்வாண நடனத்தை உறுதிப்படுத்திய போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin