Last Updated:
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிக்க ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மூன்று பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆண் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிப்பதற்காக ஆபாச வீடியோக்களை பதிவிட்டு கலங்கடித்த உத்தரபிரதேச சகோதரிகள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவீன டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள், தங்களை மேலும் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில், உத்தர பிரதேச மாநிலம் சம்பலைச் சேர்ந்த் மூன்று பெண்கள், இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் அள்ளுவதற்கும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வில்லங்கமான விஷயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, நவீன ஆடை என்ற பெயரில், அரைகுறை ஆடையுடன் அலப்பறையை கூட்டியுள்ளனர். அந்த வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு, பார்வையாளர் பலரையும் கிரங்கடித்துள்ளனர். அத்துடன், ஆபாச வார்த்தைகளையும் அள்ளித் தெளித்து பலரின் காதுகளை கூச வைத்துள்ளனர். மூன்று பெண்களும் இன்ஸ்டாகிராமில் போட்ட ஓவர் ஆட்டம், உள்ளூர் மக்களை கொதிப்படையைச் செய்துள்ளது.
பொறுத்து பொறுத்துப் பார்த்த ஊர் மக்கள், இந்த விவகாரத்தை போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை திரட்டியுள்ளனர். அதில், இன்ஸ்டாகிராமில் அடாவடி வீடியோக்களை பதிவிட்டது மெஹ்ருல் நிஷா, மெஹக் மற்றும் ஹீனா என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஜரார் ஆலம் என்பவரின் மூலம் வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டது உறுதியானது.
இதன் மூலம் மூன்று பெண்களும் மாதத்திற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆண் நண்பர் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது, ஆபாச பாடல்களை பாடுவது மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர்.
July 16, 2025 5:12 PM IST


