இந்தியாவில் வரி செலுத்துபவர்கள் அனைவருக்குமே பான் கார்டு என்பது ஒரு முக்கிய ஆவணமாகும். வருமான வரித்துறை வழங்கும் இந்த ஆவணமானது, வரி அடையாளத்துடன் சேர்ந்து அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது. வங்கி, முதலீடுகள் மற்றும் அரசு சேவைகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதில் உள்ள புகைப்படம் கூட சரியானதாகவும், தற்போதைய தோற்றத்தை பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
பான் கார்டில் உங்களது பழைய புகைப்படம் இருந்தாலோ அல்லது அதில் உள்ள உங்களது தோற்றம் தற்போதைய தோற்றத்தில் இருந்து மாறுபட்டதாக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். எளிதாக பான் கார்டில் உள்ள புகைப்படத்தை வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. NSDL அல்லது UTIITSL வலைத்தளங்களைப் பயன்படுத்தி, எளிமையான படிகள் மூலம் பான் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றிக் கொள்ள முடியும். இது குறித்த படிப்படியான வழிமுறையை இனி தெரிந்து கொள்வோம்.
1. முதலில் NSDL அல்லது UTIITSL இணையதளத்தை பார்வையிடவும். உள்நுழைந்த பிறகு அதில், TIN NSDL அல்லது UTIITSL ஆகியவற்றில் எதையோ அதனை தேர்வு செய்யலாம்.
2. “பான் கார்டு திருத்தம்/புதுப்பிப்பு” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்
3. படிவம் 49Aஐ நிரப்பவும். அதில், “புகைப்படம் பொருத்தமின்மை” என்ற விருப்பத்தைக் குறிக்கவும்.
4. தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும். பான் நம்பர், முழுப் பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
5. புதிய புகைப்படத்தை JPEG ஃபார்மேட்டில் பதிவேற்றவும்.
புகைப்படத்தின் அளவு: 4KB – 300KB -க்குள் இருக்க வேண்டும்
பரிமாணம்: 4.5 செ.மீ × 3.5 செ.மீ
6. அடையாள மற்றும் முகவரிச் சான்றுகளை சமர்ப்பிக்கவும்
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பயன்பாட்டு பில் போன்றில் தேவையானவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்
இந்திய முகவரிக்கு: ரூ.91 + ஜிஎஸ்டி
வெளிநாட்டு முகவரிக்கு: ரூ.862 + ஜிஎஸ்டி
பணம் செலுத்தும் வழிகள்: யூபிஐ, நெட் பேங்கிங் அல்லது கார்டுகள் போன்றவை
8. 15 இலக்க ஒப்புதல் எண்ணை பயன்படுத்தி, புதிய புகைப்படம் மற்றும் சமர்ப்பித்த தகவல்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்
9. தேவைப்பட்டால், ஆவணங்களை பிரிண்ட் செய்து NSDL/UTIITSL அலுவலகத்திற்கு அனுப்பவும்
10. விண்ணப்ப நிலையை கண்காணித்தல்
ஒப்புதல் எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறாக, இந்த எளிய படிப்படியான வழிகாட்டி மூலம், நீங்கள் வீட்டில் இருந்தபடியே பான் கார்டு புகைப்படத்தை எளிதாகவும், சட்டப்பூர்வமாகவும் புதுப்பிக்கலாம்.
1. அருகிலுள்ள பான் கார்டு மையத்திற்குச் செல்லவும்.
2. திருத்தப் படிவத்தை (Form 49A) நிரப்பவும்.
3. புதிய புகைப்படம் மற்றும் தேவையான ஆதாரங்களுக்கான ஆவணங்களை இணைக்கவும்.
4. கட்டணத்தை பணமாக செலுத்தவும்.
5. 15 இலக்க ஒப்புதல் எண்ணைப் பெற்றுக் கொள்ளவும்.
தேவையான ஆவணங்கள்:
அடையாளச் சான்று: ஆதார், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட்
பிறந்த தேதிச் சான்று: பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட்
முகவரிச் சான்று: பில், வங்கி அறிக்கை
புகைப்படம்: சமீபத்திய, பாஸ்போர்ட் அளவிலான வண்ண படம் (4.5 x 3.5 செ.மீ.)
July 16, 2025 7:51 PM IST
வீட்டில் இருந்தபடியே பான் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றுவது எப்படி…? படிப்படியான வழிகாட்டி இதோ…!

