• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல் | Rahul Gandhi consoles father of Odisha student who set herself on fire

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல் | Rahul Gandhi consoles father of Odisha student who set herself on fire
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் முழுமையான நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார் உயிரிழந்த 20 வயதான மாணவி. அந்தக் கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.

இருப்பினும் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 12-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் அடுத்த சில மணி நேரத்துக்குள் அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

90 சதவீத தீக்காயத்துடன் அந்த மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த மாணவி உயிருக்கு போராடினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார்.

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு தரப்பினரை கொதிப்படைய செய்துள்ளது. அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு அழுத்தம் எழுந்துள்ளது. இந்நிலையில், 14 நாள் நீதிமன்ற காவலில் மாணவி பயின்ற கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உண்மை கண்டறியும் குழு அமைப்பு: மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (யுஜிசி) அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு புதுடெல்லியில் உள்ள குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்குமார் மிட்டல் தலைமை வகிப்பார் என யுஜிசி தெரிவித்துள்ளது. முன்னாள் யுஜிசி உறுப்பினர் சுஷ்மா யாதவ் மற்றும் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் நீர்ஜா குப்தா ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆஷிமா மங்லா செயல்படுவார் என யுஜிசி அறிவித்துள்ளது.

நான்கு பேர் அடங்கிய இந்த உண்மை அறியும் குழு 7 நாட்களில் மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து முறையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும். இந்த குழு பரிசீலனைகளையும் முன்மொழியும் என யுஜிசி கூறியுள்ளது.



Read More

Previous Post

4, 6 வயது பெண் குழந்தைகளுடன் 8 வருடங்களாக இந்திய குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் மீட்பு!

Next Post

We Don’t care: உக்ரைன் போரை நிறுத்த 50 நாள் கெடு விதித்த டிரம்ப் – ரஷியா பதிலடி! | Makkal Osai

Next Post
We Don’t care: உக்ரைன் போரை நிறுத்த 50 நாள் கெடு விதித்த டிரம்ப் – ரஷியா பதிலடி! | Makkal Osai

We Don't care: உக்ரைன் போரை நிறுத்த 50 நாள் கெடு விதித்த டிரம்ப் - ரஷியா பதிலடி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin