சிங்கப்பூர் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட இந்திய கட்டுமான ஊழியர் ஒருவர், பின்னர் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கிளார்க் கீயில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், 22 வயதான லேகா பவன் என்ற ஆடவர் ஊழியரை ஆற்றில் தள்ளிவிட்டு தப்பிச் ஓடியதாக சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 6 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம் – வெளிநாட்டு ஊழியருக்கு சிறை!
இந்திய கட்டுமான ஊழியர்
நீரில் மூழ்கி உயிரிழந்த 33 வயதான ஜஸ்பீர் சிங் இந்தியாவை சேர்ந்த கட்டுமான ஊழியர் என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்தை பவன் ஒப்புக்கொண்டார். இதனால் ஒரு ஊழியரின் உயிர் பரிதாபமாக போனது.
சிறை
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள பர்மிங்காம் அகாடமி கல்வி நிறுவனத்தில் மாணவராக இருந்த பவனுக்கு, இன்று ஜூலை 16, 2025 அன்று 35 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
என்ன நடந்தது?
மது போதையில் இருந்த இருவர்
இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் 30, அன்று இரவு நேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது, பவனும் அவரது நண்பர்களும் ஆற்றின் படிகளில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தனர்.
அச்சமயம் கடும் போதையில் இருந்த பவன், பெண்களின் ஒருவரின் தலைமுடியை கோபத்துடன் பிடித்து இழுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதனால் மோதல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் நண்பர்களால் அவர் அங்கிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் இரவு 10 மணிவாக்கில், சிங் ஆற்றங்கரையில் நடந்து செல்லும் போது அந்த குழுவை சந்தித்தார். அப்போது சிங்கும் கடும் போதையில் விளக்கு கம்பம் ஒன்றை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது.
டோட்டோவில் மீண்டும் “S$10 மில்லியன்” பிரம்மாண்ட முதல் பரிசு – அதிஷ்ட கடைகள் எது?
தாய் பிரிந்த சோகம்
சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக பணியாற்றி வந்த சிங், பல மாதங்களுக்கு முன்பு போதைக்கு அடிமையானதாகவும், அதிகமாக குடிக்கத் தொடங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில், அவரின் தாயார் சமீபத்தில் மரணித்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
வாக்குவாதம்
அன்றிரவு 10:13 மணியளவில், பவன் தனியாக சிங்கை அணுகினார்.
தொடக்கத்தில், பவன் சிங்கிடம் நிதானமாக பேசினார், இருவருக்கிடையே எந்த சண்டையும் ஏற்படவில்லை.
சிங் ஆற்றங்கரையின் விளிம்பிற்கு நெருக்கமாக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று, எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல், பவன் இரண்டு கைகளை சிங்கின் மார்பில் வைத்து தள்ளினார்.
இதனால் பின்னோக்கி விழுந்த சிங், படிகளில் இருந்து உருண்டு, சிங்கப்பூர் ஆற்றுக்குள் விழுந்தார்.
பின்னர் சம்பவ இடத்திலிருந்து பவன் தப்பி ஓடினார்.
போலீசில் புகார்
அதை பார்த்துக்கொண்டிருந்த இருவர், உதவி வேண்டி சத்தம் போட்டனர்.
ஆனாலும் சிங் ஆற்றில் இருந்து வெளிவராததால், அவர்கள் காவல்துறையை அழைத்து, “மது போதையில் இருந்த ஒருவர் போதையில் இருந்த இன்னொருவரை ஆற்றில் தள்ளிவிட்டு, ஓடிவிட்டார்” என தகவல் கொடுத்தனர்.
மீட்பு நடவடிக்கை
தகவலறிந்து விரைந்து வந்த DART மீட்பு குழுவினர் மற்றும் SCDF அதிகாரிகள், மறுநாள் நள்ளிரவு 2 மணியளவில் சிங்கின் உடலை மீட்டனர்.
பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிங்கின் உடலில் பல காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அது படிகளில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
மேலும், அவரது நுரையீரலும் தண்ணீரால் நிரம்பியிருந்தது, இதனால் அவர் நீரில் மூழ்கி இருந்திருப்பது உறுதியானது.
காவல்துறையிடம் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டிய பவன், 2024 ஜூலை 1, காலை 7:55 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாதச் சிறை

