• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ் | West Indies vs Australia, 3rd Test

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ் | West Indies vs Australia, 3rd Test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிங்ஸ்டன்: 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியை 27 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து 176 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழு​மை​யாக வென்​றது ஆஸ்​திரேலிய அணி. மிட்​செல் ஸ்டார்க் முதல் 15 பந்​துகளில் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யும், ஸ்காட் போலண்ட் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​தி​யும் சாதனை படைத்​தனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது பகலிரவு டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலிய அணி 225 ரன்​களும், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 143 ரன்​களும் எடுத்​தன. 82 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 99 ரன்​கள் எடுத்​தது.

கேமரூன் கிரீன் 42, பாட் கம்​மின்ஸ் 5 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று முன்​தினம் 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி37 ஓவர்​களில் 121 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கேமரூன் கிரீன் 42, பாட் கம்​மின்ஸ் 5, ஸ்காட் போலண்ட் 1, ஜோஷ் ஹேசில்​வுட் 4 ரன்​களில் நடையை கட்​டினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் அல்​சாரி ஜோசப் 5, ஷமர் ஜோசப் 4 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

204 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 14.3 ஓவர்​களில் 27 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்வி அடைந்​தது. டெஸ்ட் போட்​டிகளில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி மிக குறைந்த ரன்​களுக்கு ஆட்​ட​மிழப்​பது இதுவே முதன்​முறை. இதற்கு முன்​னர் இதே மைதானத்​தில் கடந்த 2004-ம் ஆண்டு இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக 47 ரன்​களில் ஆட்​ட​மிழந்து இருந்​தது.

அதி​கபட்​ச​மாக ஜஸ்​டின் கிரீவ்ஸ் 11 ரன்​கள் சேர்த்​தார். அதற்கு அடுத்​த​படி​யாக மிகைல் லூயிஸ் 4, ஷாய் ஹோப் 2, அல்​ஸாரி ஜோசப் 4 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் டக் அவுட்​டில் வெளி​யேறினர். உதிரி​களாக 6 ரன்​கள் வழங்​கப்​பட்​டிருந்​தன. டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் மிகக்​குறைந்த ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்த 2-வது அணி என்ற மோச​மான சாதனையை படைத்​துள்​ளது மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி.

இதற்கு முன்​னர் 1955-ம் ஆண்டு இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக ஆக்​லாந்​தில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 26 ரன்​களுக்கு சுருண்​டிருந்​தது. கிங்​ஸ்​டன் போட்​டி​யின் 14-வது ஓவரில் ஆஸ்​திரேலி​யின் தொடக்க வீர​ரான சாம் கான்​ஸ்​டாஸ் பீல்​டிங்​கில் தவறு செய்​த​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி ஒரு சிங்​கிள் எடுத்து 27 ரன்​களை எட்​டியது. இல்​லை​யெனில் நியூஸிலாந்து அணி​யின் 70 ஆண்​டு​கால எதிர்​மறை​யான சாதனையை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சமன் செய்​திருக்​கும்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்டார்க் 9 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். இதில் அவர், முதல் 5 விக்​கெட்​களை வெறும் 15 பந்​துகளில் வீழ்த்​தி​யிருந்​தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் குறைந்த பந்​துகளில் 5 விக்​கெட்​களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்​தார். இதற்கு முன்பு 1947-ம் ஆண்டு பிரிஸ்​பனில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக ஆஸ்​திரேலி​யா​வின் எர்னி டோஷாக், 2015-ம் ஆண்டு டிரென்ட் பிரிட்​ஜில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக இங்​கிலாந்​தின் ஸ்டூவர்ட் பிராட் மற்​றும் 2021-ம் ஆண்டு மெல்​பர்​னில் இங்​கிலாந்​துக்கு எதி​ராக ஆஸ்​திரேலி​யா​வின் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 19 பந்​துகளில் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தனர். இந்த சாதனையை தற்​போது முறியடித்து புதிய சாதனையை படைத்​துள்​ளார் மிட்​செல் ஸ்டார்க்.

இலக்கை துரத்​திய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு முதல்ஓவரிலேயே மெய்​டன் ஓவருடன் 3 விக்​கெட்​களை சாய்த்து அதிர்ச்சி கொடுத்​திருந்​தார் மிட்​செல் ஸ்டார்க். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் முதல் ஓவரிலேயே 3 விக்​கெட்​களை வீழ்த்​திய 2-வது வேகப்​பந்து வீச்​சாளர் என்ற பெரு​மை​யை​யும் அவர், பெற்​றார். இதற்கு முன்​னர்2006-ம் ஆண்டு கராச்சி டெஸ்ட்போட்​டி​யில் இந்​தி​யா​வின் இர்​பான் பதான் முதல் ஓவரிலேயே ஹாட்​ரிக் விக்​கெட்​கள் வீழ்த்தி சாதனை படைத்​திருந்​தார்.

மிட்​செல் ஸ்டார்க்​கின் அனல் பறந்த வேகத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 11 ரன்​களுக்கு 6 விக்​கெட்​கள் என மட்​டுப்​படுத்​தப்​பட்​டது. மிட்​செல் ஸ்டார்க்​கிற்கு உறு​துணை​யாக பந்து வீசிய ஸ்காட் போலண்ட் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்தி சாதனை படைத்​தார். 14-வது ஓவரை வீசிய ஸ்காட்போலண்ட் முதல் மூன்று பந்​துகளி​லும் ஜஸ்​டின் கிரீவ்ஸ் (11), ஷமர் ஜோசப் (0), ஜோமல் வாரிக்​கன் (0) ஆகியோரை ஆட்​ட​மிழக்​கச் செய்து ஹாட்​ரிக் சாதனை நிகழ்த்​தி​னார். இதன் மூலம் அவர், டெஸ்ட் கிரிக்​கெட்​டில் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​திய 10-வது ஆஸ்​திரேலிய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார்.

176 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை 3-0 என முழு​மை​யாக கைப்​பற்றி பிராங்க் வொரெல் டிராபியை வென்​றது. பார்​ப​டாஸில் நடை​பெற்ற முதல் டெஸ்​டில் 159 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், கிரன​டா​வில் நடை​பெற்ற 2-வது டெஸ்​டில் 133 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் ஆஸ்​திரேலிய அணி வெற்றி கண்​டிருந்​தது. மூன்று அல்​லது அதற்கு மேற்​பட்ட டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி சொந்​த மண்​ணில்​ தொடரை ​முழுமை​யாக இழப்​பது இதுவே முதல் முறை.



Read More

Previous Post

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை – பெற்றோருக்கு UIDAI முக்கிய அறிவுறுத்தல்

Next Post

டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai

Next Post
டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai

டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin