• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு | Asian Surfing Championships to be held in Mamallapuram

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு | Asian Surfing Championships to be held in Mamallapuram
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செல​வில் நடத்​துகிறது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, ஜப்​பான், கொரி​யா, குவைத், லெப​னான், சவுதி அரேபி​யா, சீன தைபே, உஸ்​பெகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 20 ஆசிய நாடு​களைச் சேர்ந்த வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர்.

இவர்​கள் ஷார்ட்​போர்டு பிரிவு​களில் போட்​டி​யிடு​வார்​கள். ஓபன் பிரி​வில் ஆடவர், மகளிர், 18 வயதுக்​குட்​பட்ட சிறு​வர், மற்​றும் 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறும். வெற்றி பெறு​பவர்​களுக்கு தங்​கம், வெள்​ளி, வெண்​கலம் மற்​றும் தாமிரம் பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இந்​தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்​கான இறுதி தகுதி சுற்று போட்​டி​யாக அமைந்​துள்​ளது. மேலும் ஷார்ட்​போர்டு பிரி​வில் முதலிடம் பெறும் வீரர், வீராங்​கனை 2025-ம் ஆண்டு நடை​பெற உள்ள உலக அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு தகுதி பெறு​வார்​கள்.

இந்​நிலை​யில் ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் அறி​விப்பு நிகழ்ச்சி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். நிகழ்ச்​சி​யில் இந்​திய அலைச்​சறுக்கு சங்​கத்​தின் தலை​வர் அருண் வாசு, தமிழ்​நாடு அலைச்​சறுக்கு சங்​கத்​தின் துணைத்​தலை​வர் வீர​பாகு மற்​றும் எஸ்​டிஏடி அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

இந்​திய அணி விவரம்: ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்​பில் பங்​கேற்​கும் இந்​திய அணி​யில் 12 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 8 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.

ஸ்ரீகாந்த், கிஷோர் குமார், கமலி மூர்த்​தி, சிருஷ்டி செல்​வம், தயின் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் (தமிழ்​நாடு), ரமேஷ் புதி​கால் (கேரளா), சுகர் சாந்தி பனாரஸ் (கோ​வா), ஆத்​யா சிங்​, சான்​வி ஹெக்​டே (கர்​நாட​கா).

செய்தித் துளிகள்:

  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி தொடங்கும் எனவும் 20 மற்றும் 29-ம் தேதி பதக்க போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் சவுத்தாம்ப்டன் நகரில் இன்று நடைபெறுகிறது.
  • சென்னையில் நடைபெற்று வரும் எம்சிசி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஐஓசி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியா ஜூனியர் நேஷனல் அணியையும், இந்தியன் ரயில்வே 6-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியையும் தோற்கடித்தன.



Read More

Previous Post

பிரதமர், ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்தவரின் மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன? | Supreme Court grants protection to man who drew objectionable cartoon about PM and RSS

Next Post

நியூசிலாந்து பயணத்தின்போது துணை பிரதமர் பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்பு | Makkal Osai

Next Post
நியூசிலாந்து பயணத்தின்போது துணை பிரதமர் பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்பு | Makkal Osai

நியூசிலாந்து பயணத்தின்போது துணை பிரதமர் பல உயர்மட்ட சந்திப்புகளில் பங்கேற்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin