Last Updated:
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை லண்டனில் சந்தித்து புகைப்படம் எடுத்தனர்.
லண்டனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் உள்ளனர். இதில் இந்திய ஆடவர் அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிவருகிறது. பெண்கள் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்றுள்ளது.
அதன்படி முதல் ஒருநாள் போட்டியை இந்திய மகளிர் அணி நாளை (16ஆம் தேதி) விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய ஆடவர் அணி வரும் 23ஆம் தேதி விளையாடவுள்ளது. இதற்கிடையில், இன்று இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி சந்தித்தது.
#WATCH | The United Kingdom: King Charles III pose with the players of the Indian Men’s and Women’s Cricket team, the coach, staff members and BCCI officials, at St. James’s Palace in London. pic.twitter.com/YRhQPcXvuw
— ANI (@ANI) July 15, 2025
லண்டனில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் மன்னர் சார்லஸ் உடன் இரு அணிகளும் புகைப்படம் எடுத்துக் கொண்டன. இந்த சந்திப்பின்போது, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஹர்மன்பிரீட் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்டோர் இருந்தனர்.
July 15, 2025 9:53 PM IST

