Last Updated:
இந்திய வீரர்களை ஊக்கப்படுத்தவும், தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும் உசேன் போல்ட் வருகிறார்.
உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஜமைக்காவின் உசேன் போல்ட் இந்தியாவிற்கு வரும் செப்டம்பரில் வருகை தரவுள்ளார்.
8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்றதோடு 100 மீ, 200மீ, 100மீ தொடர் ஓட்டம் என மூன்று உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும் செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் டெல்லி மற்றும் மும்பைக்கு வருகை தரவுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்திருந்த உசேன் போல்ட் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் இணைந்து கிரிக்கெட் மற்றும் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில், மீண்டும் இந்தியாவிற்கு செல்லவிருப்பதை மிக ஆவலோடு எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் நிறைய ரசிகர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் உசேன் போல்ட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உசேன் போல்ட் முன்னிலையில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நேஷனல் ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வீரர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
July 15, 2025 9:09 PM IST


