இதையடுத்து ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர், ‘’குன்னம் தொகுதியின் அத்தனை வாக்காளர்களும் குழுமி, இந்த பூமியே அதிரும் அளவுக்கு கடல்போல் காட்சியளிக்கிறது. ஸ்டாலின் அவர்களும், உதயநிதி அவர்களும் எங்கே பார்த்தாலும் பேட்டியிலும், பொதுக்கூட்டத்திலும் 2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று பொய்யான செய்தியைச் சொல்கிறார்கள். குன்னம் தொகுதிக்கு வந்து எழுச்சியைப் பாருங்கள், இந்த எழுச்சியே வெற்றியைக் காட்டும். வெற்றி விழா காணுகிற காட்சியாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன்.

