• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு! பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு! பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 15, 2025 2:52 PM IST

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நிமிஷா பிரியாநிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார்.

நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.

இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நாளை (16ம் தேதி) அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நிமிஷாவின் குடும்பத்தினர் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

மறுபுறம், சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் மூலம், அங்குள்ள பிரபல சூஃபி மதகுருவான ஷேக் ஹபீப் உமர் மூலம் உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக, கேரளா செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 15, 2025 2:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு! பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்

Read More

Previous Post

இந்த ஆண்டு இதுவரை 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – 37 பேர் பலி

Next Post

ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக்; ஸ்டார்க் உலக சாதனை: 27 ரன்களுக்குச் சுருண்டு மே.இ.தீவுகள் படுதோல்வி! | Boland hat-trick Starc world record west indies bowled out for 27 runs

Next Post
ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக்; ஸ்டார்க் உலக சாதனை: 27 ரன்களுக்குச் சுருண்டு மே.இ.தீவுகள் படுதோல்வி! | Boland hat-trick Starc world record west indies bowled out for 27 runs

ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக்; ஸ்டார்க் உலக சாதனை: 27 ரன்களுக்குச் சுருண்டு மே.இ.தீவுகள் படுதோல்வி! | Boland hat-trick Starc world record west indies bowled out for 27 runs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin