• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தோழியின் கணவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்… லிவ் இன் பார்ட்னர், குழந்தை கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தோழியின் கணவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்… லிவ் இன் பார்ட்னர், குழந்தை கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் என்ற 22 வயது பெண்ணை நிகில் என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே சோனல் கர்ப்பமானார். இருவருக்கும் பெரிய அளவில் சம்பாத்தியம் இல்லாத நிலையில், குழந்தையை கலைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு சோனலுக்குக் குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு வேறொரு பெற்றோருக்கு விற்று விட்டனர். இதையடுத்து இரண்டு பேரும் டெல்லியில் குடியேறினர். அங்கு சோனலுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மி என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அந்த பழக்கம் காரணமாக அடிக்கடி ரேஷ்மி வீட்டிற்கு சோனல் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் துர்கேஷுடன் சோனலுக்குத் தொடர்பு இருப்பதாக நிகில் சந்தேகப்பட ஆரம்பித்தார். ஒரு நாள் சோனலுக்கும், துர்கேஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ்ஆப் சாட்டிங்கைப் பார்த்த நிகிலுக்கு சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இதனால், சோனலுக்கும், நிகிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட ஆரம்பித்தது.

இந்தநிலையில் சோனல் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார், இந்த முறை குழந்தையை கலைத்து விடலாம் என சோனல் தெரிவித்திருக்கிறார். ஆனால் நிகில் இக்குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்றும் இக்குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம் என்றும் நிகில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனைக் கேட்காத சோனல் நிகிலுக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று கருவைக் கலைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இளம் டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் கருவைக் கலைத்ததாக நம்பிய நிகில், தலைக்கேறிய ஆத்திரத்தில் கடும் தகராறு செய்துள்ளார். இந்த சண்டை முற்றவே சோனல், ரேஷ்மியின் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு ஆத்திரம் தணிந்த நிகில் அடிக்கடி போன் மூலம் சமாதானமாகப் பேசி மீண்டும் வீட்டிற்கு வரும்படி சோனலைக் கேட்டுக்கொண்டார். ஆனால் சோனல் வர மறுத்து விட்டார்.

இந்நிலையில், ரேஷ்மி தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகச் சென்றுள்ளார். ரேஷ்மியின் கணவரும் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் சோனலும், ரேஷ்மியின் 6 மாத குழந்தையும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அந்நேரம் நிகில் அங்குச் சென்று தன்னுடன் வரும்படி சோனலை வற்புறுத்த ஆரம்பித்தார். சோனல் வர மறுத்தால் அவரை கொலை செய்து விடுவது என்ற நோக்கத்துடன், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு ஒன்றை கையோடு எடுத்துச் சென்றுள்ளார் நிகில்.

இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில், சோனலின் வாயில் டேப்பை ஒட்டி அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார் நிகில். இதேபோன்று 6 மாத குழந்தையின் வாயிலும் டேப் ஒட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார் நிகில். பச்சை குழந்தை என்றும் பாராமல் கொலையை அரங்கேற்றி விட்டு, நிகில் பழைய டெல்லி, பரோலி, ஹால்வா என சுற்றித்திரிந்திரிந்துள்ளார். பின்னர் நண்பர் ஒருவர் வீட்டில் நிகில் பதுங்கியிருந்துள்ளார். அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த போலீசார் நிகிலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். உண்மையில் சந்தேகம் தான் கொலைக்கு காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 11, 2025 3:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தோழியின் கணவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்… லிவ் இன் பார்ட்னர், குழந்தை கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!

Read More

Previous Post

இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Next Post

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை! | england players pacifies heartbroken jadeja and siraj on lords field

Next Post
தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை! | england players pacifies heartbroken jadeja and siraj on lords field

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா - இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை! | england players pacifies heartbroken jadeja and siraj on lords field

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin