சிங்கப்பூர் டோட்டோவில் மீண்டும் S$10 மில்லியன் என்ற பிரம்மாண்ட முதல் பரிசு அறிவிப்பு செயப்பட்டுள்ளது.
இந்த டோட்டோ குலுக்கல், நாளை மறுநாள் ஜூலை 17, வியாழக்கிழமை அன்று இரவு 9:30 மணிக்கு நடைபெறும் என்று சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) தெரிவித்துள்ளது.
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு
கடைசியாக ஜூலை 7, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடந்த மூன்று குலுக்களிலும் குரூப் 1 பரிசை யாரும் வெல்லவில்லை. எனவே இந்தப் பரிசுத் தொகை பிரம்மாண்ட உச்சத்தை அடைந்துள்ளது.
கேஸ்கேட் டிரா
கடைசி 3 குலுக்கலில் வெற்றியாளர்கள் இல்லையெனில் அடுத்ததாக நடைபெறும் குலுக்கல் “கேஸ்கேட் டிரா” என்று அழைக்கப்படுகிறது.
ஜூலை 17 அன்று நடைபெறும் குலுக்களிலும் குரூப் 1 வெற்றியாளர்கள் யாரும் இல்லையெனில், டோட்டோ விளையாட்டு விதிகளின்படி, முதல் பரிசு குரூப் 2 வெற்றியாளர்களிடையே பிரித்துக் கொடுக்கப்படும்.
7வது முறையாக டோட்டோ ஜாக்பாட்
வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் போட்டியும் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் ஏழாவது முறையாக டோட்டோ ஜாக்பாட் S$10 மில்லியன் வெள்ளியை எட்டியது.
முந்தைய பிரம்மாண்ட குலுக்கல்: ஜனவரி 3, ஜனவரி 24, பிப்ரவரி 7, மார்ச் 6, ஏப்ரல் 28 மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் நடந்தன.
குறிப்பாக, ஜூன் 19 அன்று நடைபெற்ற டோட்டோ குலுக்கலில், ஒரே ஒருவர் சுமார் S$12.32 மில்லியன் மதிப்புள்ள குரூப் 1 பரிசை தட்டிதூக்கினார்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்
அதிஷ்ட TOTO கடைகள் எது?
இதுபோன்ற அதிஷ்ட குலுக்கல்கள் ஒருவரின் அதிஷ்டத்தை பொறுத்து அமையும்.
நம் அதிஷ்டத்தை சோதிப்பது தவறில்லை ஆனால் அதற்கு அடிமையாவது தான் தவறு. உழைப்பே உயர்வு!
சிங்கப்பூர் மக்கள் நம்பும் அதிஷ்ட கடைகள்:
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

