• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும் | Indian astronaut Shubhanshu Shukla prepares to head back home

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும் | Indian astronaut Shubhanshu Shukla prepares to head back home
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வு செய்த இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டார். அவரது விண்​கலம் இன்று பிற்​பகல் அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பசிபிக் கடலில் இறங்​கு​கிறது.

அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​மாணவி​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் தேதி இஸ்ரோ விஞ்​ஞானிகளு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்​கள் தங்​கி​யிருந்​தார். அப்​போது அவர் சுமார் 60 வகை​யான ஆய்​வு​களை செய்​தார். குறிப்​பாக நெல், காராமணி, எள், கத்​தரி, தக்​காளி உள்​ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். அந்த விதைகளை அவர் விண்​வெளி​யில் சிறப்பு பெட்​டிகளில் வைத்து முளைக்​கச் செய்​தார். இந்த ஆராய்ச்​சி​யில் இஸ்​ரோ, கேரள வேளாண் பல்​கலைக்​கழகம், ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகிய​வை​யும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

பாசி பன்​றிக்​குட்டி என்ற நுண் உயி​ரியை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதை வெறும் கண்​ணால் பார்க்க முடி​யாது. நுண்​நோக்கி உதவி​யுடன் மட்​டுமே பார்க்க முடி​யும். இந்த நுண் உயிரி விண்​வெளி​யில் எவ்​வாறு வளர்​கிறது என்​பது குறித்​தும் சுக்லா ஆய்வு செய்​தார்.

நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இந்த பாசி வகைகள் எவ்​வாறு வளர்​கின்றன என்​பது குறித்து அவர் ஆய்வு நடத்​தி​னார். மைக்​ரோஅல்கா என்ற பாசி வகை​யை​யும் சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதன் வளர்ச்சி குறித்​தும் அவர் செய்​தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்​ஸிஜனை உற்​பத்தி செய்ய முடி​யும். இது எதிர்​கால விண்​வெளி பயணத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும்.

இவை உட்பட ஒட்​டுமொத்​த​மாக 60 வகை​யான ஆராய்ச்​சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளி​யில் மேற்​கொண்​டார். விதைகள், பாசிகள் உள்​ளிட்ட அனைத்​தை​யும் அவர் பூமிக்கு கொண்டு வரு​கிறார்.

விண்​வெளி பயணம் தொடக்​கம்: ஷுபன்ஷு சுக்லா உட்பட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் பூமியை வந்​தடை​யும்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் இன்று மாலை 3 மணி அளவில் விண்​கலம் இறங்​கு​கிறது. டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழு, 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்க தயார் நிலை​யில் உள்​ளனர். இதுகுறித்து இஸ்ரோ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தில் இருந்து டிராகன் விண்​கலம், பூமி​யின் சுற்று வட்​டப் பாதை​யில் பயணம் செய்​யும். படிப்​படி​யாக கீழே இறங்கி பூமி​யின் வளிமண்​டலத்​தில் விண்​கலம் நுழை​யும்​போது உராய்வு காரண​மாக சுமார் 1,900 செல்​சி​யஸ் வெப்ப நிலை ஏற்​படும். இந்த அபாய கட்​டத்தை தாண்​டிய பிறகு விண்​கலம் பாது​காப்​பாக பூமியை நோக்கி வரும். சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு கடலில் பாது​காப்​பாக விண்​கலம் இறக்​கப்​படும்.

30 நிமிடங்​களுக்கு பிறகு கிரேன் மூலம் கப்​பல் தளத்​துக்கு விண்​கலம் தூக்​கப்​படும். இதன்​பிறகு கதவு​கள் திறக்​கப்​பட்டு 4 வீரர்​களும் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​படு​வார்​கள்​.

இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​. இவ்​​வாறு இஸ்​ரோ வட்​​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.



Read More

Previous Post

ஹோண்டா காா்கள் விற்பனை 12% சரிவு

Next Post

கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம் | Makkal Osai

Next Post
கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம் | Makkal Osai

கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin