Last Updated:
58 பந்துகளில் கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார்
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வரும் நிலையில், முக்கிய பேட்ஸ்மேன்களான கே.எல். ராகுல், ரிஷப் பந்த் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும் 2 ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் 387 ரன்கள் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 5 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்டிருந்த பந்த் 9 ரன்கள் எடுத்தார்.
தற்போது 29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் இந்திய அணிக்கு 96 ரன்கள் தேவை. இன்னும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும்
July 14, 2025 4:35 PM IST


