Last Updated:
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 39.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும் 2 ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் 387 ரன்கள் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
இதற்கிடையே, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது பந்துவீசிய சிராஜ், பென் டக்கட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட சிராஜ், அவுட் ஆன பென் டக்கட்டின் முன்பாக, விதிகளை மீறி ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் போட்டிக் கட்டணத்தில் 15 சதவிகிதத்தை அபராதமாகச் செலுத்த சிராஜுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
July 14, 2025 6:39 PM IST


