Last Updated:
ரவிந்திர ஜடேஜா, நிதிஷ் குமார், ரெட்டி, பும்ரா, சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை 163 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற கட்டத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 30 ரன்கள் தேவைப்படுகிறது.
கைவசம் 1 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் தற்போது தேநீர் இடைவேளை வழங்கப்பட்டுள்ளது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2 ஆவது இன்னிங்ஸில் 70 ஓவர்களை நிறைவு செய்துள்ள இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2 ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
82 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் ரவிந்திர ஜடேஜா, நிதிஷ் குமார், ரெட்டி, பும்ரா, சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை 163 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற கட்டத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்படுதால் லார்ட்ஸ் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
July 14, 2025 8:52 PM IST


