பிருத்வி மற்றும் பிரலே போன்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை (SRBM) விட வேகத்திலும், துல்லியத்திலும் மிகவும் சக்தி வாய்ந்ததும், மிகுந்த அபாயம் கொண்டதுமான BM-04 ஏவுகணை, இந்திய விமானப்படையின் (IAF) புதிய விருப்பமாக உருவெடுத்து வருகிறது. இது எதிரியின் விமான தளங்கள், கட்டளை மையங்கள் மற்றும் மொபைல் ஏவுகணை அமைப்புகளை அழிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களில் இந்திய விமானப்படை, தொடர்ந்து ஆபத்தான சூழ்நிலைகளில் செயல்பட வேண்டிய அவசர நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, இந்திய விமானப்படை (IAF) தற்போது அதிக துல்லியத்துடன் கூடிய, அதி வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை (SRBM) ஏவுகணையை தேடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படைக்காக BM-04 ஏவுகணை உருவாக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை இரண்டு நிலைகளைக் கொண்ட திட எரிபொருளைக் கொண்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இதன் மேல்பகுதியில் உள்ள பொதுவான ஹைப்பர்சோனிக் கிளைடு பாடி (Common Hypersonic Glide Body (C-HGB)) மூலம் இது மேக் 5ஐ விட அதிக வேகத்தில் பயணிக்கிறது. இது பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- நீளம்: 10.2 மீட்டர்
- விட்டம்: 1.2 மீட்டர்
- எடை: 11,500 கிலோ
- தூரம்: 400 முதல் 1,500 கிமீ
- போர்முனை எடை: 500 கிலோ
- துல்லியம் (CEP): 30 மீட்டருக்கு குறைவாக
பிருத்வி மற்றும் பிரலே ஏவுகணைகளின் வரம்பும், துல்லியமும் ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைத்திருக்க, BM-04 ஏவுகணை அவற்றைத் தாண்டி மேம்பட்ட செயல்திறனையும் விரிவான தாக்கும் திறனையும் கொண்டிருக்கிறது. மேம்பட்ட வழிகாட்டி அமைப்புகள், வழிதவறாமல் வேகமாக செல்லக்கூடிய அம்சம் மற்றும் தடுப்புகளை மீறும் திறன்கள் இதை மிக அழுத்தமான தாக்கம் கொண்ட ஆயுதமாக மாற்றுகின்றன.
இந்த ஏவுகணை மூலம் இந்திய விமானப்படை (IAF) விமான தளங்கள், கட்டளை மையங்கள் மற்றும் மொபைல் ஏவுகணை அமைப்புகள் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை மிக துல்லியமாக அழிக்க முடியும். இது இந்தியாவின் வழக்கமான தாக்கும் திறன்களை பல மடங்கு உயர்த்தும்.
BM-04 ஏவுகணை 2025 பிப்ரவரி 28 முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘விக்யான் வைபவ்’ பாதுகாப்பு கண்காட்சியில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. பாதுகாப்பு வட்டாரத்தில் இதற்கான வரவேற்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது.
July 14, 2025 9:56 PM IST
பிருத்வி, பிரலேவைத் தாண்டி இந்திய விமானப் படையின் நம்பிக்கையாக உருவெடுக்கும் BM-04 ஏவுகணை…! முக்கிய அம்சங்கள் என்னென்ன…?

