Last Updated:
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும் 2 ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் 387 ரன்கள் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்த நிலையில், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 58 பந்துகளில் 39 ரன்களும், கருண் நாயர் 33 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் 1 ரன்னும், ரிஷப் பந்த் 9 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பும்ரா 54 பந்துகளை எதிர்கொண்டு ரவிந்திர ஜடேஜாவுக்கு நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
July 14, 2025 9:33 PM IST


