• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா…? எளிமையான வழிமுறைகள் இதோ…!

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா…? எளிமையான வழிமுறைகள் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நல்ல கிரெடிட் ஸ்கோர் பெறுவதற்கு கிரெடிட் கார்டு மட்டுமே ஒரே வழி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையில் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமலேயே வலிமையான ஒரு கிரெடிட் சுயவிவரத்தை உங்களால் உருவாக்க முடியும். தனிப்பட்ட தேர்வு, செலவு செய்யும் பழக்கங்கள் அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்த்தாலும், அது இல்லாமல் நல்ல கடன் சுயவிவரத்தை எப்படி அமைப்பது என்பதற்கான சாத்தியங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை வடிவமைப்பது எது?

இதில் 5 மிக முக்கிய காரணிகள் உள்ளன:

கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாறு: உங்களுடைய EMIகள் மற்றும் லோன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடன் பயன்பாட்டு விகிதம்: உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் உச்சவரம்பில் நீங்கள் எவ்வளவு தொகையைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பது இந்தக் கடன் பயன்பாட்டு விகிதத்தைக் குறிக்கும்.

கடன் வரலாற்றின் நீளம்: அதாவது, பழைய, நன்றாக நிர்வகிக்கப்பட்ட கடன் அக்கவுண்டுகள்.

பல்வேறு கடன்கள்: ஆரோக்கியமான கடன் நடத்தையை நிரூபிக்கும் விதமாக அடமானத்துக்குட்பட்ட மற்றும் அடமானம் இல்லாத கடன்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பது இதில் அடங்கும்.

பல விண்ணப்பங்கள்: ஒரு குறுகிய காலகட்டத்தில் புதிய கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.

சிறந்த கடன் வரலாற்றை கிரெடிட் கார்டு இல்லாமல் அமைப்பது எப்படி? 

சரியான நேரத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவது இதில் மிகவும் வலிமையான ஒரு கருவி. அது பர்சனல் லோன், கல்விக் கடன் அல்லது வேறு எந்தவிதமான லோன் ஆக இருந்தாலும், சரியான நேரத்தில் தவணைகளை நீங்கள் செலுத்திவிட்டால், உங்களுடைய கடன் சுயவிவரம் உங்களுக்கு சாதகமாக, சிறந்த முறையில் அமைக்கப்படும். ஃபிரிட்ஜ் அல்லது லேப்டாப் போன்ற உபகரணங்கள் வாங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இந்தக் கடன்களை நீங்கள் எளிதில் வாங்க முடியும். மேலும், அதற்கான பேமெண்ட்களை ஒவ்வொரு மாதமும் சரியாகச் செலுத்துவதன் மூலம், நல்ல கடன் வரலாற்றை உங்களால் அமைக்க முடியும். இது தவிர ஃபிக்ஸட் டெபாசிட்களைக் காட்டிக் கடன்களை வாங்கலாம். இவற்றை வாங்குவது எளிது மற்றும் வழக்கமான கடன் திருப்பிச் செலுத்தும் முறையோடு உங்களுடைய கடன் வரலாற்றைச் சிறந்த முறையில் அமைப்பதற்கு உதவும். மேலும், ஒரு சிறிய பர்சனல் லோனை எடுத்து, அதற்கான தவணைகளைச் சரியாகச் செலுத்துங்கள். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உங்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்பு இதில் வெளிப்பட்டு, கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.

கண்காணிக்க மறந்து விடாதீர்கள்:

உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் கட்டாயமாகச் சரிபார்க்க வேண்டும். அதில் சிறிய பிழைகள் இருந்தால்கூட, உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம். ஆரம்பத்திலேயே பிழைகளைக் கண்டுபிடித்து, அதனைச் சரிசெய்வது உங்களுடைய கடன் சுயவிவரத்தைச் சரியாக வைத்திருக்க உதவும்.

இதையும் படிங்க: கிரெடிட் கார்டை பயன்படுத்தி UPI பேமெண்ட்… இது நல்லா இருக்கே…!

எனவே, இறுதியாக, சரியான நேரத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது, புத்திசாலித்தனமான கடன்களை வாங்குவது மற்றும் வழக்கமான முறையில் கிரெடிட் ரிப்போர்ட்டைச் சரிபார்ப்பது போன்றவை வலிமையான ஒரு கிரெடிட் ஸ்கோரை கிரெடிட் கார்டு இல்லாமலேயே பெறுவதற்கு உதவும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 14, 2025 6:40 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா…? எளிமையான வழிமுறைகள் இதோ…!

Read More

Previous Post

4 விக்கெட் சரிவு… இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் – கடைசி நாளில் என்ன நடக்கும்? – ENG vs IND | 4 wickets down team India need 135 runs to win in lords test on last day

Next Post

சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

Next Post
சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

சாப்பிட்டால் அதிர்ஷ்டம்- 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin