• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

4 விக்கெட் சரிவு… இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் – கடைசி நாளில் என்ன நடக்கும்? – ENG vs IND | 4 wickets down team India need 135 runs to win in lords test on last day

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
4 விக்கெட் சரிவு… இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் – கடைசி நாளில் என்ன நடக்கும்? – ENG vs IND | 4 wickets down team India need 135 runs to win in lords test on last day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை பென் டக்​கெட் 0, ஜாக் கிராவ்லி 2 ரன்​களு​டன் தொடங்​கினர். நிதான​மாக விளை​யாடிக் கொண்​டிருந்த பென் டக்​கெட்​டை, முகமது சிராஜ் வீழ்த்​தி​னார். அவர் 11 ரன்​கள் மட்​டுமே எடுத்​தார். இதையடுத்து ஆலி போப் களம்​பு​குந்​தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்​க​வில்​லை. 17 பந்​துகளைச் சந்​தித்த நிலை​யில் 4 ரன்​கள் மட்​டுமே எடுத்​திருந்த ஆலி போப், சிராஜ் வீசிய பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

22 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜாக் கிராவ்​லி, ஜெய்​ஸ்​வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அதைத் தொடர்ந்து களத்​துக்கு வந்த ஹாரி புரூக் அதிரடி​யாக விளை​யாடினார். அவர் 19 பந்​துகளில் 23 ரன்​கள் (4 பவுண்​டரி, ஒரு சிக்​ஸர்) சேர்த்த நிலை​யில் அவர் பெவிலியன் திரும்​பி​னார்.

அதன் பிறகு 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் பென் ஸ்டோக்​ஸும், ஜோ ரூட்​டும் நிதான​மாக விளை​யாடி ரன்​களைச் சேர்த்​தனர். உணவு இடைவேளை​யின்​போது இங்​கிலாந்து 4 விக்​கெட் இழப்​புக்கு 98 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஜோ ரூட் 17, பென் ஸ்டோக்ஸ் 2 ரன்​கள் எடுத்​திருந்​தனர்.

உணவு இடைவேளைக்​குப் பின்​னர் பென் ஸ்டோக்​ஸ், ரூட் ஜோடியைப் பிரிக்க இந்​திய பந்​து​வீச்​சாளர்​கள் செய்த முயற்​சிகள் பலன் அளிக்​க​வில்​லை. இறு​தி​யில் 40 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில், வாஷிங்​டன் சுந்​தர் பந்​து​வீச்​சில் ஜோ ரூட் ஆட்​ட​மிழந்​தார். 96 பந்​துகளைச் சந்​தித்து இந்த ரன்​களை ரூட் எடுத்​திருந்​தார்.

அதைத் தொடர்ந்து வந்த விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​தை​யும், போல்​டாக்கி திருப்பி அனுப்​பி​னார் வாஷிங்​டன் சுந்​தர். அவர் 14 பந்​துகளில் 8 ரன்​கள் மட்​டுமே சேர்த்​திருந்​தார். தேநீர் இடைவேளை​யின்​போது இங்​கிலாந்து அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 175 ரன்​கள் எடுத்​திருந்​தது. அதன்​பின்​னர் இங்​கிலாந்து அணி​யின் விக்​கெட்​கள் வரிசை​யாக வீழ்ந்​தன.

பென் ஸ்டோக்ஸ் 33, கிறிஸ் வோக்ஸ் 10, பிரைடன் கார்ஸ் 1, ஷோயிப் பஷீர் 2 ரன்​களில் வீழ்ந்​தனர். ஆர்ச்​சர் 5 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

62.1 ஓவர்​களில் 192 ரன்​களுக்கு இங்​கிலாந்​தின் 2-வது இன்​னிங்ஸ் முடிவுக்கு வந்​தது. இந்​திய அணி தரப்​பில் வாஷிங்​டன் சுந்​தர் 4, பும்​ரா, சிராஜ் ஆகியோர் தலா 2, நிதிஷ் ரெட்​டி, ஆகாஷ் தீப் ஆகியோர் ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். பின்​னர் 193 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன்​ இந்​தி​ய அணி தனது 2-வது இன்​னிங்​ஸை தொடங்​கியது.

இந்தியா 2-வது இன்னிங்ஸ்: நான்காம் நாள் ஆட்ட முடிவில் 17.4 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் ஷுப்மன் கில் 6, நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 33 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.

கடைசி நாளில் என்ன நடக்கும்? – இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 135 ரன்கள் தேவை. இந்தியாவின் வசம் உள்ள 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து கைப்பற்றினால் அந்த அணி வெற்றி பெறும். இதனால் கடைசி நாளில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



Read More

Previous Post

அதிக பிக்சல் திறனுடன் புதிய ஸ்மார்ட்போன்! விவோ எக்ஸ் 200 எஃப்இ அறிமுகம்! Vivo X200 FE

Next Post

கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா…? எளிமையான வழிமுறைகள் இதோ…!

Next Post
கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா…? எளிமையான வழிமுறைகள் இதோ…!

கிரெடிட் கார்டு இல்லாமலேயே சிறந்த கிரெடிட் வரலாற்றை அமைக்கணுமா...? எளிமையான வழிமுறைகள் இதோ...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin