Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்ததாக கூறி, உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் நடவடிக்கையால் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வந்தார். எனினும் உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டெனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேசுவது ஒன்று, செய்வது வேறாக இருப்பதாக விமர்சித்தார். மேலும் போர் நிறுத்தம் பற்றி அழகாக பேசுவதாகவும், ஆனால், உக்ரைன் மக்கள் மீது இரவில் குண்டு வீசுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனயடுத்து இஸ்ரேலை தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்க அமெரிக்க முன் வந்துள்ளது. அந்தவகையில் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் அபாயம் எழுந்துள்ளது.
July 14, 2025 2:46 PM IST
“உக்ரைனுக்கு அமெரிக்கா வான் பாதுகாப்பு வழங்கும்” – அதிபர் டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!


