• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்! | Anchovy fish that helped Nagai fishermen

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்! | Anchovy fish that helped Nagai fishermen
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.

தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்குவதற்கு மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்டனர். ஆனால், கடல் காற்று அதிகம் வீசுவதன் காரணமாக பெரிய ரக மீன்கள் கடலின் ஆழத்துக்குச் சென்றுவிட்டதால், போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், செலவு செய்த பணத்துக்கு ஈடாக நஷ்டம் இல்லாத அளவுக்கு மீன்கள் கிடைத்ததாக வும் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும், சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், அதிக அளவில் நெத்திலி மீன்களும் கிடைத்துள்ளதால் மீனவர்கள் நஷ்டமின்றி தப்பினர். துறைமுகத்தில் பல இடங்களில் நெத்திலி மீன்கள் மலைபோல குவிக்கப்பட்டிருந்தன. அதிக வரத்து காரணமாக நெத்திலி மீன்கள் விலை குறைந்து கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனையானதால், மீன் பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நெத்திலி மீன்கள்.

அரபிக்கடல் கேரளப் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் கேரள வியாபாரிகள் சரக்கு வாகனத்துடன் வந்து நாகை துறைமுகத்தில் முகாமிட்டு தங்களுக்கு தேவையான ஏற்றுமதி ரக மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் ஏற்றுமதி ரக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

வெளி மாவட்ட வியாபாரிகளும், நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும் மீன் பிரியர்களும் வஞ்சிரம்,வாவல், கடல் விரால், பால்சுறா உள்ளிட்ட மீன்கள் சற்று விலை ஏற்றமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

நாகையில் நேற்று மீன்களின் விலை நிலவரம்(கிலோவுக்கு): இறால் ரூ.450 முதல் ரூ.650 வரை, கனவா ரூ.250 முதல் ஏற்றுமதி ரகம் ரூ.450, நண்டு ரூ.400 முதல் ரூ.650 வரை, வஞ்சிரம் ரூ.700 முதல் ரூ.1,200 வரை, வாவல் ரூ.700 முதல் ரூ.1,200 வரை, சங்கரா ரூ.300, சீலா ரூ.450, கிழங்கான் ரூ.350, நெத்திலி ரூ.250, பாறை ரூ.400 முதல் ரூ.550 வரை, கடல் விரா ரூ.550, பால் சுறா ரூ.400, திருக்கை ரூ.200 முதல் ரூ.400 வரை.



Read More

Previous Post

ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் – த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்! | Rahul s second mistake Gill captaincy amazing Lords Test thriller

Next Post

ஜோகூர் போலீசாரின் அதிரடி சோதனை: RM3.55 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

Next Post
ஜோகூர் போலீசாரின் அதிரடி சோதனை: RM3.55 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

ஜோகூர் போலீசாரின் அதிரடி சோதனை: RM3.55 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin