Last Updated:
சாய்னா நேவால், தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளார். 2018ல் திருமணம் செய்த இவர்கள், ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பருபள்ளி காஷ்யப்பை பிரிவதாக அறிவித்துள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன் தொடரில் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்று அசத்தினார். 2015 ஆம் ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உச்சம் தொட்டார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப்புக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனது ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். இருப்பினும், காஷ்யப் இந்த அறிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை அல்லது பிரிந்து செல்வது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரும் அமைதி, வளர்ச்சி நோக்கி வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், இந்திய முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபள்ளி கஷ்யப் உடனான சாய்னா நேவாலின் ஏழு ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
July 14, 2025 8:52 AM IST


