• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 7:12 AM IST

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புகின்றனர். ‘டிராகன்’ விண்கலம் நாளை கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கும்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாஇந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகின்றனர். இதனை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களை வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ என்ற ராக்கெட் மூலம், ’டிராகன்’ விண்கலம் கடந்த மாதம் 25ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கொண்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்கள் விண்வெளிக்கு சென்றனர். ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் 28 மணிநேரம் பயணித்து, வெற்றிகரமாக ஜூன் 26ஆம் தேதி விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே ஏழு வீரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், புதிதாக வந்த வீரர்களுக்கு வெல்கம் டிரிங்க் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகளை மேற்கொண்டனர். ஜூலை 10ஆம் தேதி பூமிக்கு திரும்பும் பணிகள் தொடங்கும் எனத் திட்டமிட்டப்பட்ட நிலையில், சற்று தள்ளிப்போனது.

இவர்கள் ஆய்வுகளை முடித்துக் கொண்டு இன்று பூமிக்கு புறப்படவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சர்வதேச விண்வெளி மையத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய இந்திய வீரர் சுபாஷு சுக்லா, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்பதை நெகிழ்ச்சியோடு கூறினார்.

இதைத் தொடர்ந்து, வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து தங்கள் வாழ்த்தையும், அன்பையும் பரிமாரிக் கொண்டனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘டிராகன்’ விண்கலத்தின் கதவுகள் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் விண்கலத்திற்குள் செல்வார்கள்.

இன்று மாலை 4.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன்’ விண்கலம் தனியாகப் பிரிக்கப்பட்டு, பூமியை நோக்கிய பயணம் தொடங்கும். சுமார் 24 மணிநேர பயணத்திற்குப் பிறகு நாளை பிற்பகல் 3 மணியளவில் வட அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய கலிபோர்னியா கடற்கரையில் ’டிராகன்’ விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 14, 2025 6:29 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

Read More

Previous Post

பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு | Vedanta donation to BJP increases 4 times

Next Post

பிணவறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது | Makkal Osai

Next Post
பிணவறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது | Makkal Osai

பிணவறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுகாதார அமைச்சகம் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin