Last Updated:
முதலில் பெரிய அளவில் சந்தேகம் கொள்ளாத போலீசார் இன்சூரன்ஸ் பணம் குறித்த விவரங்களை விரிவாக வெங்கடேஷ் பேச ஆரம்பித்ததும் சந்தேகம் கொண்டனர்.
சினிமா பட பாணியில் தனது மாமியாரை மருமகன் ஒருவர் கார் ஏற்றி கொன்றுள்ளார். பின்னர் போலீஸின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலும் ஈடுபட்டார். அவர் பிடிபட்டது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சித்திப்பேட் மாவட்டத்தின் பெத்தமாசன்பள்ளி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனது மாமியார் ராமுவா பெயரில் கடந்த ஆண்டு போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் பல்வேறு இன்சூரன்ஸ்களை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்த இன்சூரன்ஸ் பணத்தை முழுவதுமாக தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வெங்கடேஷுக்கு ஏற்பட்டது. இதற்காக திட்டமிட்ட வெங்கடேஷ் மாமியாரை ஆதாரம் ஏதுமின்றி கொலை செய்வதற்கு முடிவு செய்தார். இதன் அடிப்படையில் வயலுக்கு மாமியாரை அழைத்துச் சென்ற அவர் அங்கிருந்து நள்ளிரவில் அவரை வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார்.
இருட்டில் சென்று கொண்டிருந்த ராமுவாவை வெங்கடேஷ் கார் ஏற்றி கொலை செய்தார். பின்னர் இது இயல்பாக நடந்த விபத்தாக போலீஸிடம் அவர் நாடகம் ஆடினார். முதலில் பெரிய அளவில் சந்தேகம் கொள்ளாத போலீசார் இன்சூரன்ஸ் பணம் குறித்த விவரங்களை விரிவாக வெங்கடேஷ் பேச ஆரம்பித்ததும் சந்தேகம் கொண்டனர்.
தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேஷ் தான் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
July 13, 2025 6:46 PM IST


