• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் – வனிதா விஜயகுமார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் – வனிதா விஜயகுமார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,விஜய் ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலமாக நடிகையானவர், வனிதா விஜயகுமார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து ‘தேவி, நான் ராஜாவாகப் போகிறேன், அநீதி’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்துள்ளார். பின்னர் பல வருடங்களுக்கு பிறகு, தற்போது மீண்டும் சினிமாக்களில் நடித்து வருகிறார். நடன மாஸ்டர் ராபர்ட்-வனிதா இருவரும் இணைந்து நடித்த ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தை வனிதாவே இயக்கியிருந்தார். இப்படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜ்’ படத்தில் வரும் ‘சிவராத்திரி..’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று, இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் “ராத்திரி சிவ ராத்திரி” பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா கூறியுள்ளார்.

இதுபற்றி வனிதா விஜயகுமார் கூறும்போது, “படம் வெளியாவதற்கு முன்பு, இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்றேன். அப்போது இந்த பாடல் பற்றி அவரிடம் கூறினேன். அவர் ஓ.கே. என்றுதான் சொன்னார். ஆனால் இப்போது வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சி தருகிறது. அதோடு அந்த பாடல் ஒரு இசை நிறுவனத்தின் கைவசம் உள்ளது. அவர்களிடம் உரிமை வாங்கித்தான் பாடலை பயன்படுத்தி உள்ளேன். அதனால் எனக்கு வழக்கைப் பார்த்து பயம் இல்லை. வழக்கு போடுவதாக இருந்தால், அந்த இசை நிறுவனத்தின் மீதுதான் போட வேண்டும். சிறு வயதில் இருந்து இளையராஜா வீட்டில் வளர்ந்து இருக்கிறேன். நான் அவர் வீட்டிற்கு மருமகளாக போய் இருக்க வேண்டியவள். சில விஷயங்களை வெளியில் சொன்னால், வருத்தம் ஏற்படும் என்பதால் சொல்ல விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.



Read More

Previous Post

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை: வாஷிங்டன் சுந்தர் அபாரம் – ENG vs IND | team india need 193 runs to win lords test versus england washington sundar spin

Next Post

புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொலை : ரஷ்ய முகவர்களை தீர்த்துக்கட்டியது உக்ரைன்

Next Post
புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொலை : ரஷ்ய முகவர்களை தீர்த்துக்கட்டியது உக்ரைன்

புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொலை : ரஷ்ய முகவர்களை தீர்த்துக்கட்டியது உக்ரைன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin