• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்? | PSG vs Chelsea Where to watch FIFA Club World Cup final live

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்? | PSG vs Chelsea Where to watch FIFA Club World Cup final live
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன.

அமெரிக்காவில் ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 62 போட்டிகள். இதன் இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் முன்னேறின. அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு வெள்ளோட்டமாக இந்த தொடர் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரூதர்போர்ட் பகுதியில் இந்த இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரண்டு அணிகளும் நேர்த்தியான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தி வெற்றி பெற்றன.

அமெரிக்காவில் நிலவும் வெப்பமான வானிலை சூழலை வீரர்கள் போட்டியின் போது சமாளிக்க வேண்டி உள்ளது. இது இந்த தொடரில் பேசு பொருளானது. வெப்பம் காரணமாக போட்டிகளின் நேரம் கூட மாற்றப்பட்டன. அதே நேரத்தில் பார்வையாளர்களின் குறைந்த எண்ணிக்கை போன்றவை இந்த மற்றொரு சவாலாக இருந்தது. முக்கிய அணிகள் விளையாடும் போட்டிகள் மற்றும் நாக்-அவுட் போட்டிகளுக்கு மட்டுமே மக்களின் வரவேற்பு இருந்தது. இந்த சூழலில் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிப் போட்டி உடன் நிறைவடைகிறது.

இந்த சீசன் முழுவதும் பிஎஸ்ஜி கிளப் அணி இதுவரை ஆறு பட்டங்களை வென்றுள்ளது. இதில் சாம்பியன் லீக் பட்டத்தை அந்த அணி முதல் முறையாக வென்று அசத்தியது. பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே பயிற்சியின் கீழ் அந்த அணி ஏழாவது பட்டத்தை இந்த சீசனில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. குறிப்பாக டெம்பெல்லே முக்கிய வீரராக பிஎஸ்ஜி அணிக்கு திகழ்கிறார். அவரை சுற்றியே அந்த அணியின் லைன்-அப் உள்ளது.

மறுபக்கம் புதிய அத்தியாயத்தை தொடங்கும் நோக்கில் செல்சீ இந்தப் போட்டியில் விளையாடும். நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டுள்ள அந்த அணிக்கு இந்த வெற்றி நிச்சயம் ஊக்கம் தரும்.

இந்தியாவில் இந்தப் போட்டியை எப்படி நேரலையில் பார்ப்பது? – இந்தப் போட்டியை இந்தியாவில் தொலைக்காட்சியில் பார்க்க முடியாது. அதே நேரத்தில் DAZN மொபைல் அப்ளிகேஷன் மற்றும் வலைதளத்தில் நேரலையில் இந்தப் போட்டியை கட்டணமின்றி பார்க்கலாம். இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் உள்ளவர்கள் DAZN மூலமாகவே நேரலையில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

Next Post

500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தப் போகிறதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

Next Post
500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தப் போகிறதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தப் போகிறதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin